உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்தவும் – சம்பந்தன் வலியுறுத்து

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கே ஏன் இப்படி அஞ்சுகின்றது?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பின்னடிக்கும் இந்த அரசு, மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை எப்படி நடத்தப் போகின்றது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“சாக்குக்குப்போக்குக் காரணங்களைக் சொல்லாமல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் வாக்குரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என்றும், மக்கள் ஆணைக்கு வழிவிடுவது அரசின் கடமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles