உள்ளாட்சி தேர்தலை பிற்போடும் அதிகாரம் நாடாளுமன்றுக்கு கிடையாது – பீரிஸ் சுட்டிக்காட்டு

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்படாக வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் பீரிஸ் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலுள்ள சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் புதிய உள்ளாட்சிசபைகள் நிறுவப்பட வேண்டும். அப்படியானால் வேட்புமனு கோரும் அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்பட வேண்டும். மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுதன் ஊடாக உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட முடியாது. சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் ஊடாகவே தேர்தலை பிற்போட முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles