திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்று(15) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தின.
இதன்போது உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
