ஊடகங்களை ஒடுக்கி, தணிக்கைக்கு உட்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை. அவர் பிரதமர் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்குரிய பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். அது அவர்களின் பொறுப்பு. எனவே, சிறிய சம்பவத்தை பெருப்பித்து, ஊடக அடக்குமுறையென காண்பிக்க வேண்டாம்.
ஊடக அடக்குமுறையை கையாள வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இணைய ஊடகங்களையும் நாம் கட்டுப்படுத்தவில்லை. ஊடக ஒழுக்க விழுமியங்களை கடைபிடித்து செயற்பட வேண்டிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.
போலி பிரசாரங்களை முன்னெடுப்பது தவறு. அந்தவகையிலேயே ஜனாதிபதியின் படத்தை பயன்படுத்தி போலி நாணயத்தாளை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.”- என்றார்.
