மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், சம்பள நிர்ணய சபை ஊடாக உரிய தீர்வை எட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தும் பெப்ரவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு வேலாயுதம் ருத்திரதீபனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்த அமரர். வேலாயுதத்தின் புதல்வரே ருத்திரதீபனாவார்.
அத்தொழிற்சங்கத்தில் தற்போது இவர் உயர் பதவி வகிப்பதுடன், தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதி பொதுச் செயலாளராகவும், தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உபதலைவருமாக செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானுக்கும், தெற்காசிய பிராந்திய தொழிற்சபையின் பிரதி பொதுச் செயலாளரும், தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் உபத் தலைவருமான வேலாயுதம் ருத்திரதீபனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
அதன்பின்னரே போராட்டத்தை ஆதரிக்கும் முடிவை தீபா அறிவித்துள்ளார்.
