ஊவா மாகாண கரம் போட்டியில் பசறை த.தே.பாடசாலை சாம்பியனாக தெரிவு

ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் கரம் (Carrom) போட்டியில் பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கரம் போட்டி தொடரில் பங்குபற்றிய பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் சகல வயது மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி 20 வயதின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடம்,17 வயதின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடம், 20 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடம், 17 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடம் ஆகிய வெற்றிகளோடு ஒட்டுமொத்தமாக மாகாண மட்ட கரம் போட்டியில் (CARROM OVERALL CHAMPIONS ) சாம்பியனாக பசறை தமிழ் தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles