‘எங்களை கைவிடவேண்டாம்’ – ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி மன்றாட்டம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வீடியா மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள், உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, ‘‘நீங்கள் இல்லாமல் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்.

நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இருளை கிழித்து ஒளி பிறக்கும். உக்ரைனுக்கு மகிமை உண்டாகும்’’ என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles