எங்கள் ஆட்சியில் ஐஎம்எப் ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும்

” இந்நாட்களில் சில அரசியல் கட்சிகள் IMF உதவி இல்லாமல் பயணிக்க முடியும் என கூறுகின்றன. இந்த முட்டாள்தனமான கதையை நம்பி ஏமாற வேண்டாம் என்று 220 இலட்சம் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். உலகப் பொருளாதார மற்றும் வர்த்தக முறைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதிச் சட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

IMF, உலக வங்கி, GAT, WTO போன்றவற்றின் மூலம் உலகப் பொருளாதார முறைமை தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இல்லாமலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என யாராவது முட்டாள்தனமான வீரவாதத்தை முன்வைத்தால் அது உலக நகைச்சுவை.” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்குச் சாதகமான சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், இன்று அவ்வாறான உடன்பாடு எட்டப்படவில்லை. மக்களின் வலிகளுக்கு முன்னுரிமை கொடுத்து IMF ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.

அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தரையில் கால் பதிக்காமல், வானிலிருந்து கொண்டு கைச்சாத்திட்ட மக்கள் விரோத ஒப்பந்தமே தற்போதைய அரசாங்கம் இணக்கம் கண்டுள்ள ஒப்பந்தம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 237 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹுனுமுல்ல மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

IMF மூலம் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் போது, ​​அவை நாட்டுக்கு பொருத்தமானதாகவும் அமைய வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் மனிதாபிமானமாக இருக்க வேண்டும். மனிதனைப் பாதுகாத்து வாழ வைப்பதே மனிதனின் உன்னத கடமையாகும்.

எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் மனிதனை பாதுகாக்கும் ஒன்றாக அமையவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம் என IMF பிரதிநிதிகளிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டிக்காட்டினார்.

மேலும், IMF இல்லாமலேயே வங்குரோத்தான எமது நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று யாராவது சொன்னால் அது பொய்யும் மாயையுமாகும். எமது நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவை. இதில் மக்களுக்கு நன்மையும் நிவாரணமும் தரக்கூடிய இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles