பாராளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடா ( பிரதான அமைப்பாளர்) பதவிக்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்படி குறித்த பதவியை இலக்கு வைத்து ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் கிரியல்ல, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் ஆகியோர் காய்நகர்த்ல்களை மேற்கொண்டுவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனினும், சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் ஆகிய இருவரில் ஒருவருக்கே இப்பதவி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
9ஆவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஆளுங்கட்சியின் சார்பில் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்படவுள்ளனர்.