எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையும்!

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறையும் என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரேமஜயந்த, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.

அண்மைய நாட்களில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி கொழும்பு துறைமுகத்தில் இறங்கும் சரக்குகள் குறைந்த விலையில் வந்து சேரும் என்றார்.

அதற்கமைய, இந்த குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு கையளிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles