எம்.பியாகிறார் இசைஞானி!

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார்.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர். மேலும் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது.

இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதை பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

Related Articles

Latest Articles