உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தமது எம்.பி பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான் எம்.பி, இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் எம்பி போட்டியிடுவது தொடர்பான தகவலை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்திருந்தார்.
அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால் , அந்த வெற்றிடத்துக்கு பட்டியலில் அடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.










