எயார்பஸ் ஊழல் விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள அவர், ஆணைக்குழுவிடம் அளித்த வாக்குமூலத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில், இன்று நடந்த வழக்கு விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபரான கபில சந்திரசேனவின் வாக்குமூலத்தின்படி, அவர் இலஞ்சமாகப் பெற்ற 60 மில்லியன் ரூபா, மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 20 மில்லியன் ரூபா, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புருணையில் ஒரு போலி நிறுவனம் நிறுவப்பட்டு, அந்த நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஏற்பாட்டின் மூலம், ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோ இலஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த நிதி அவுஸ்ரேலியாவில் உள்ள கொமன்வெல்த் வங்கியில் இருக்கும் கபில சந்திரசேனவின் கணக்கிற்கு மாற்றப்பட்டதும், இலஞ்சப் பணத்தின் பகுதிகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பணிப்பாளர் மற்றும் உயர் பதவியில் உள்ள பல அரசாங்க அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான கபில சந்திரசேனவை கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம, ஏப்ரல் 2 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles