வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று, 300 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
கடந்த வருடம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தப்பட்ட 12 வழக்குகளில் முன்வைக்கப்பட்ட 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ – 9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தி யோகத்தர்கள், நீதிமன்றப் பொலி ஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட் டது.
சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகா தார நடைமுறைகளைப் பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
