‘எரிபொருள் தட்டுப்பாடு’ – 60 வருடங்கள் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தம்

ஹற்றன் இ.போ.ச டிப்போ மூலம், சாமிமலை நகரில் இருந்து கண்டிக்கு நடத்தப்பட்டு வந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பஸ் கடந்த 60 வருடங்களாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, சாமிமலை, மஸ்கெலியா, நோட்டன், கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கம்பளை, பேராதனை ஊடாக கண்டி வரை சேவையில் ஈடுபட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், நாவலப்பிட்டி மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகளும் அதிக பயனைப் பெற்று வந்ததுடன், இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles