‘எல்லாம் முடிந்துவிட்டது – இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை’

“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாகவே அர்த்தம் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி இன்று நேரில் சந்தித்தார்.

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles