எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற பிரிட்டிஷ் யுவதி வழுக்கி விழுந்து காயம்!

எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு  இன்று (01) பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .

Madelene Rosemery Francesca என்ற 33 வயதுடைய பிரிட்டிஷ் பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எல்ல பகுதியை பார்ப்பதற்காக வந்த இந்த பெண், இன்று (01) சிறிய ஸ்ரீ பாதையை பார்ப்பதற்கு மற்றவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று ​​ 10. 45 மணியளவில் திடீரென வழுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர்  அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்ஷவிடம் வினாவிய போது, ​​எல்ல பகுதியில் இருந்து   விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் வலது கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles