ஏப்ரல் 5 உள்ளாட்சி தேர்தல்?

இலங்கையில் உள்ளாட்சிசபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சிசபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் அக்காலப்பகுதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறுவதால் ஏப்ரல் மாதமே பொருத்தமான காலப்பகுதியென கருதப்படுகின்றது.

இதன்அடிப்படையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ளது.

Related Articles

Latest Articles