ஏ.ஆர்.ரகுமானின் கனவுப் படம் ஏப்ரல் 16 வெளியாகிறது

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘99 ஸாங்ஸ்’.

‘99 ஸாங்ஸ்’ தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். ஏனெனில் இப்படத்திற்கு அவர் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரே கதையும் எழுதி உள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படம், 2015ல் தொடங்கப்பட்டது. இதில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ரிலீஸ் திகதியை ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இசையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles