ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் கடந்த சில நாட்களாகப் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக உலக விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ஏற்பட்ட பறவைக்காய்ச்சல் பரவலால் மில்லியன் கணக்கான பறவைகளைக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாண்டில் மட்டும், சீனாவில் மனிதர்களிடையே 21 எச்5என்6 ரகப் பறவைக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை தென் கொரியாவில் 770,000 பறவைகள் இருக்கும் பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து விலங்குகளும் கொல்லப்பட்டன.
ஜப்பான், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகியவற்றிலும் பறவைக்காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். ஆனால், வாத்து போன்ற பறவைகளை உண்பதன் மூலம் அது மனிதர்களுக்குப் பரவாது.
இலையுதிர்காலம் மற்றும் இடம்பெயரும் காட்டுப் பறவைகளால் பறவைக்காய்ச்சல் பொதுவாக பறவுகின்றமை குறிப்பிடத்தக்கது.