ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – அநுர சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) விற்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்பன பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பற்றியும் இந்த உரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) , தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர விஜித ஹேரத்தும் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles