ஐந்து உயிர்களை காவு கொண்ட ராகலை மத்திய பிரிவு தோட்ட கோர சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
ராகலை காேர சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் வயது (27) என்பவரை இராகலை பொலிசார் இம்மாதம் 12.10.2021ஆம் திகதி அன்று கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தங்கையா இரவீந்திரனை அன்றைய தினம் மாலை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இராகலை பொலிசார் ஆஜர்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை .ஆனால் சந்தேக நபர் தொடர்பாக இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் வழக்கை விசாரித்த நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை அறிக்கை,மரண விசாரணை அறிக்கை,பிரேத பரிசோதணை அறிக்கை
உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் அடுத்த வழக்கில் சமர்பிக்க பொலிசாருக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் (08.11.2021) திங்கட் கிழமை வரை வழக்கு ஒத்தி வைப்பதாகவும் அதுவரை சந்தேக நபரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.