வெளிமடை நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதை பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
41,30 வயதுடைய பதுளை மற்றும் வெளிமடை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிமடை நகரில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது வெளிமடை நகரில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 4050 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் ஒன்பது லட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது காகொள்ள பகுதியில் வீடொன்றை உடைத்து திருடப்பட்டதாக கூறப்படும் நகைகளே அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், இவர்கள் பல குற்றங்களுடன் தொடர்பு கொண்டிருக்க கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெளிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபர்களை வெளிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
த.டிமேஷன்










