ஐ.சி.சி சிறந்த வீரர் தெரிவில் பிரபாத் ஜயசூரிய

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி) ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர, வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி புதனன்று (03) வெளியிட்டது.

அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜயசூரிய அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இதில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் ஸமான் மற்றும் நியூசிலாந்தின் மார்க் சப்மனின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று வீரர்களில் ஒரு வீரரை வாக்கெடுப்பின் அடிப்படையில், ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக ஐ.சி.சி அறிவிக்கும்.

Related Articles

Latest Articles