ஐ.தே.கவில் இணைகிறாரா தயாசிறி? சு.க. பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படுமா?

கட்சி மாநாட்டின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் வரவுள்ளது என வெளியாகும் தகவல்களை கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டுவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி குருணாகலையில், தயாசிறி ஜயசேகரவின் தொகுதியில் நடைபெறவிருந்தது.

எனினும், ஆளுங்கட்சி பக்கம் உள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் மாநாடு கொழும்புக்கு மாற்றப்பட்டது எனக் கூறப்பட்டது.

இதனால் கொழும்பு மாநாட்டில் தயாசிறி பங்கேற்கமாட்டார் எனவும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பில் வினவியபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை கட்சி மாநாட்டில் தயாசிறி ஜயசேகர பங்கேற்பார் எனவும், செலவு குறைப்பை கருத்திற்கொண்டே மாநாடு கொழும்பில் நடத்த முடிவெடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார் என்றுகூட தகவல் பரப்படுகின்றது. அந்த தகவலிலும் உண்மை இல்லை – என்றார் மைத்திரி

Related Articles

Latest Articles