“ சஜித்தை நான் நேசிக்கின்றேன், ஆனால் சஜித்தைவிட என் தாய் நாட்டை நேசிக்கின்றேன், எனது மகன் சத்துரவுக்கு தேசியப்பட்டியல் தருவதாக கூறினார். நீங்கள் கேட்கும் எதையும் வழங்க தயார் எனவும் சஜித் என்னிடம் கூறினார். அந்தளவு என்மீது அவர் அன்பு வைத்துள்ளார், நானும் அப்படிதான், சஜித் உட்பட அவர் அணியில் உள்ள எவர் என்னை விமர்சித்தாலும் சஜித்துக்கு எதிராக ஒரு வார்த்தையேனும் பயன்படுத்த மாட்டேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று தமது ஆதரவை வெளிப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.