ஒமிக்ரொன் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க இலங்கை மருத்துவ சங்கம் முன்வைக்கும் ஆலோசனை

ஒமிக்ரொன் கொவிட் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கு மேலதிகமாக, நாட்டுக்கு வருகைதந்த பின்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles