‘ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணிலால் ஜனாதிபதியாவும் முடியும்’

” 40 ஆசனங்களை வைத்துக்கொண்டு பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு , தேவையேற்படின் அரசியல் விஞ்ஞானத்தின் பிரகாரம் ஒரு ஆசனத்தை வைத்து மீண்டும் பிரதமர் ஆகலாம். அதன்பின்னர் ஜனாதிபதியாகும் ஆளுமையும் உள்ளது.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர  அபேவர்தன தெரிவித்தார்.

அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணமொன்றை மேற்கொள்வதற்காகவும், நாட்டுக்காகவுமே ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றம் அனுப்புகின்றது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதில் தமக்கு சிக்கல் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், யார் தலைமை தாங்குவது என்ற விடயத்தாலேயே சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

Paid Ad
Previous articleநாட்டில் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யும்
Next articleநுவரெலியாவில் 5 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை