கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் ஜெனிவா பயணம் – திருமலை சம்பவம் குறித்தும் முறைப்பாடு

இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

அங்கு இடம்பெறவுள்ள சந்திப்புக் கள் குறித்து இன்னமும் உறுதியாகத்
தீர்மானிக்கப்படாத போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள், இணையனுசரணை நாடுகள் மற்றும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்புக்களை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திருமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் முறையிடவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக் குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன் போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்
கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப் புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தா னிகர் நாடா அல்-நஷீஃப் உரையாற் றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles