கடன் தொல்லையால் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்

பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்த முடியாது அழுத்தங்களுக்கு உள்ளான தாய் ஒருவர், 5 வயதான ஆண் பிள்ளை மற்றும் 8 வயதான பெண் பிள்ளைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின் நால்ல தலாஹேன பின்கும்புரவத்த பிரதேசத்தில் நடந்துள்ளது

நேற்று நடந்த இந்த சம்பவத்தில் விஷம் அருந்திய நிலையில் ஆபத்தான நிலைமையில் இருந்த இரண்டு பிள்ளைகள் கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாய் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

31 வயதான தாய், தனது கணவனுக்கு தெரியாமல் சுமார் 3 லட்சத் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலைமையில், பெண், அன்னாசி பயிர் செய்கைக்கு பயன்படுத்தப்படும் மூன்று கிருமி நாசனி குப்பிகளை எடுத்து வந்து அவற்றில் இரண்டு குப்பிகளை பிள்ளைகளுக்கு பருக்கி விட்டு, தானும் அதனை அருந்தியுள்ளார்.

விஷம் கொடுக்கப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் பிள்ளைகளின் உடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 5 வயதான ஆண் பிள்ளை அயல் வீட்டுக்கு சென்று தாய் வீட்டில் கீழே விழுந்து கிடப்பதாக கூறியுள்ளது.

அப்போது அங்கு சென்ற அயல் வீட்டுப்பெண்ணொருவர், பெண் விஷம் அருந்தி இருப்பதை அறிந்து, பெண்ணை உடனடியாக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சற்று நேரத்தில் சிறுவன் தனக்கு தலைவலிப்பதாக கூறியுள்ளார். தாய் அருந்தியதை தாய் தமக்கும் வழங்கியதாக சிறுவன் கூறியுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் சீமாட்டி றிஜ்வே மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக நால்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles