கடும் கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை நாளை தளர்வு! மாகாணம் தாண்ட தடை!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நாளை காலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

பயணத்தடை தளர்த்தப்படும் காலப்பகுதியில் நகர்ப்பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். காவல்துறை ரோந்து நடவடிக்கையும் இடம்பெறும்.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றுமாறு சுகாதார தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அலுவலகங்களில் பணிபுரிவதற்கு குறைந்தளவானோரையே சேவைக்கு அழைக்க வேண்டும்.

வீடுகளிலிருந்து Online ஊடாக பணிபுரிவோர் தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவதற்கு நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமாகும்.

மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில், தகுந்த காரணத்திற்காக மாத்திரம் மாகாணத்திற்குள் பயணிக்க முடியம்

சுற்றுலாப் பயணங்கள், யாத்திரை செல்லல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை.

அதேவேளை, 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணத்தடை அமுலுக்குவரும். தற்போதைய சூழ்நிலையில் 25 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Paid Ad
Previous articleதெமட்டகொட சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு வைரஸ் தொற்று!
Next article3 மாதங்களாக சந்தா இல்லை – தொழிற்சங்கப் பணியாளர்கள் பாதிப்பு!