கடும் வறட்சி: தேயிலை விளைச்சல் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தேயிலை விளைச்சல் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சியினால் தேயிலை தோட்டங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் தேசிய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் லால் பிரேமநாத் குறிப்பிட்டார்.

அத்துடன் தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தரமான தேயிலை உற்பத்திகளை பெற்றுக்கொள்வதில் இந்நாட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles