கட்டார் நோக்கி பயணமாகும் எரிசக்தி அமைச்சர்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles