கண்டி நீதிமன்ற வாளாகத்தில் குண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு போலியான தகவல் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து வட்டவல பகுதியைச் சேர்ந்த 53 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரின் பெயரில் உள்ள சிம் அட்டையில் இருந்தே அழைப்பு வந்துள்ளது. அவர் பஸ் நடத்துனராக பணியாற்றுகின்றார்.
தனது தொலைபேசி நேற்று காணாமல்போய்விட்டதாக பொலிஸாரிடம் குறித்த நபர் கூறியுள்ளார்.
பிறகு அவரின் ஊரில் உள்ள மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொலைபேசி இருந்துள்ளது. இருவரும் இணைந்தே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.