கண்டி மாவட்டத்திலும் டெங்கு தாண்டவம் – 9,048 பேர் பாதிப்பு!

கண்டி மாவட்டத்தில் 2023 ஜனவரி முதல் இதுவரை டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டெங்கு நோயினால் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 309 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 955 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை டெங்கு நோயினால் நாடளாவிய ரீதியில் இதுவரை 86 ஆயிரத்து 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related Articles

Latest Articles