கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன திருத்தும் இடமொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று மதியம் ஏற்பட்டதாக கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
வாகன திருத்தும் இடத்திலிருந்த வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
மின்சார கசிவே, தீ பரவியமைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு கூறுகின்றது.