வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஜூலை 29 ஆம் திகதி திருவிழாஊர்வலம் ஆரம்பமாகி இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறும்.
வருடாந்த திருவிழா ஆகஸ்ட் 12 ஆம் திகதி கதிர்காமம் மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.
கதிர்காமக் கந்தனின் திருவிழா ஊர்வலம் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேக்கர தெரிவிக்கையில்,
ஜூலை 29 – முதல் பெரஹரா, ஜூலை 30 – இரண்டாவது பெரஹெரா, ஜூலை 31 – மூன்றாவது பெரஹெரா, ஆகஸ்ட் 01 – நான்காம் பெரஹெரா, ஆகஸ்ட் 02 – ஐந்தாவது பெரஹெரா, ஆகஸ்ட் 03 – ஆறாவது பெரஹெரா, ஆகஸ்ட் 04 – ஏழாவது பெரஹெரா, ஆகஸ்ட் 05 – எட்டாவது பெரஹெரா, ஆகஸ்ட் 06 – ஒன்பதாவது பெரஹெரா, ஆகஸ்ட் 07 – பத்தாவது பெரஹெரா, ஆகஸ்ட் 08 – பதினோராவது பெரஹெரா மற்றும் தீ மிதிப்பு விழா, ஆகஸ்ட் 09 – பன்னிரண்டாம் பெரஹெரா, ஆகஸ்ட் 10 – பதின்மூன்றாவது பெரஹெரா, ஆகஸ்ட் 11 – பதினான்காவது பெரஹெரா, ஆகஸ்ட்12 – தீர்த்தோற்சவம் நடைபெறுமென அவர் தெரிவித்தார்.










