கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பும் வழியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போதே கத்திக்குத்து தாக்குல் இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் என்ற இளம் குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
