கத்தி, கோடரியுடன் சென்ற யாழ். இளைஞன் கைது!

யாழ். கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு விரைந்தபோது, வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற நபரையே பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளயிட்டுள்ள நிலையில் குறித்த 29வயதான இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles