நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை குழு கூட்டத்தில் வேலு யோகராஜா மீதான குற்றம் விசாரணை செய்யப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆராயப்பட்டு, உண்மைத்தன்மையின் அடிப்படையில் நிர்வாக சபையினால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை இ.தொ.கா. ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.
கந்தப்பளை காணி விவகாரம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.










