இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டார். அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.