கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் , கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து பழக்கடையொன்றும் சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளொன்றும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










