கம்பளை நகரில் பிரதான சந்தியிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரை வழியாக நேற்றிரவு கடைக்குள் இறங்கிய கொள்ளையர்கள், தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளனர்.
வியாபார நிலைய உரிமையாளர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன.