” ஊவாவில் சசிந்திர ராஜபக்சவை வீழ்த்தினேன். தற்போது கம்பஹா மாவட்டத்துக்கு வந்துள்ளேன். இனி பஸில் ராஜபக்சவுடனும் அரசியல் ரீதியில் மோதுவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதிக்கான அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பதுளை மாவட்ட மக்கள்மீது ஏற்பட்ட கோபத்தால் நான் கம்பஹாவுக்கு வரவில்லை. இன்னும் 10 ஆண்டுகள்தான் அரசியல் செய்வேன். அந்த காலப்பகுதிக்குள் தேசிய மட்டத்தில் அரசியலில் ஈடுபடவேண்டும். மிகப்பெரிய பதவிகளுக்கு போட்டியிட வேண்டும்.
ஊவாவில் சசீந்திர ராஜபக்சவை வீழ்த்தினேன். கம்பஹாவில் பஸில் ராஜபக்சவுக்கும் சவால் விடுப்பேன்.” – என்றார்.
