இலங்கையில் வழங்கப்படும் மிக உயரி விருதான ‘இலங்கையின் பெருமை’ விருது இம்முறை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்த இலங்கைப் பிரஜைகளுக்கும், இலங்கையரல்லாத நபர்களுக்கும் அவரது வாழ்நாளில் ஒருதடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற தேசிய விருது வழங்கல் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருவது மரபாகவுள்ளது.
அதற்கமைய, ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருது எமது நாட்டில் வழங்கப்படுகின்ற உயர் தேசிய கௌரவ விருதாகும். தேசபந்து கரு ஜயசூரிய ஆற்றிய சேவையைப் பாராட்டுமுகமாக அவருக்கு ஸ்ரீலங்காபிமானய ‘இலங்கையின் பெருமை’ விருதை 2023 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதியன்று வழங்கிக் கௌரவிப்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.










