கறுப்பாடுகளுக்கு மைத்திரி விடுத்துள்ள எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி கண்டிக்கு பயணம் மேற்கொண்டு தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெற்றார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

மேற்படி சந்திப்புகளுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சியமைப்பதே தனது எதிர்ப்பார்ப்பு என குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் கட்சி கட்யெழுப்படும் எனவும் அறிவித்தார்.

மைத்திரியின் இந்த அறிவிப்பானது மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலரை சினம்கொள்ள வைத்துள்ளது. இது தொடர்பில் ஆளுங்கட்சியின் உயர் மட்ட தலைவர்களிடமும் அது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.

இதற்கிடையில் கண்டி பயணத்துக்கு முன்னர் கட்சி சகாக்களுடன் மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தியுள்ளார். எப்படியாவது சுதந்திரக்கட்சியை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.

அதேபோல கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மொட்டு கட்சிக்கு சார்பாக செயற்படுபவர்கள் வெளியேறினால்கூட பரவாயில்லை, நாம் எமது பயணத்தில் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Paid Ad