நுவரெலியா மாவட்டத்தில் கல்வி நடவடிக்கையை குழப்பிக்கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ,
” இன்று பேசும்பொருளாக காணப்படும் ஹட்டன் வலய பாடசாலை ஆசிரியர்களின் இடம் மாற்றம் சம்பந்தமாக பிரச்சினைக்கு தனது தனிபட்ட காரணத்தை முன்வைத்து கல்வி விடயங்களை குழப்பிகொண்டிருக்கின்றார் கணபதி கணகராஜ்.
மலையகத்தில் இன்று கல்வி நிலை மோசமடைந்து போவதற்கு காரணம், இவர்களின் அரசியல் தலையீடே, அரசாங்கம் தனக்கு கொடுத்த வேலையை தன்னிச்சையாக செயற்படுத்த விடாமல் இ.தொ.காவிற்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பதினால்தான் இன்று பல ஆசிரியர்கள் மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
ஹட்டன் வலயத்தில் இடம்பெற்ற இடம்மாற்றத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து முன்னால் பணிப்பாளரை இடைநிறுத்தி தற்போது பெரும்பான்மை இனத்தவரே இங்கு நியமனம் பெறுவதற்கு வழிசமைத்துள்ளார்.
தனது அரசியலின் இருப்பு கேள்விகுறியானதினால் தற்போது அவர் குழம்பிபோயுள்ளார்.
அரச உத்தியோகத்தினர்களை சுயமாக இயங்க விடாமல் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களையும் குழப்பிகொண்டிருக்கும் கணபதி கனகராஜை உடனே கைது செய்து கல்வி நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டும் அன்றி நுவரெலிய மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?
எமது சமுகத்தின் கல்வி நடவடிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் இவர்கள் போன்றோரை கட்சி தலைவர்கள் உயர்பதவி கொடுத்து உற்சாகம் படுத்துவது ஏன்? ” – என்றுள்ளது.
