களுத்துறை, இசுரு உயன பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
79 மற்றும் 65 வயதுகளுடைய இரு பெண்களே வீட்டுக்குள் இருந்து இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிகளவு துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் அவதானித்தபோதே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.