களுத்துறை மாணவி மரணம் – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு

களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தின் மூன்றாம் மடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரின் சாரதியாகச் செயற்பட்டவர், மாணவியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோரே இவ்வாறு மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக குறித்த சந்தேகநபர்களைக் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி கடந்த 15ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles