யாழ்ப்பாணம், இருபாலைப் பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருபாலை, டச்சு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை , இருபாலைப் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நின்ற நால்வர் அடங்கிய குழுவொன்று, வாளைக் காட்டி , வீதியில் பயணித்தவரின் மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
